இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் சில: (நன்றி : தினமலர்-வாரமலர்)

→ ஜோதிடர், குரு, நோயாளி, கர்ப்பிணி, மருத்துவர் முதலியவர்களுக்கு ஆபத்து காலத்தில் உதவ வேண்டும்.
→ சகோதரன் அல்லது சகோதரி தாழ்ந்த நிலையில் இருந்தால் அவர்களுக்கு உதவ வேண்டும்.
→ குடும்பஸ்தன் ஒரு ஆடை மட்டும் அணிந்து உணவருந்தக்கூடாது.
→ நெருப்பை வாயால் ஊதக்கூடாது.
→ சாப்பிடும் போது தவிர மற்ற நேரத்தில் இடது கையால் நீர் அருந்தக்கூடாது.
→ குரு, ஜோதிடர், வைத்தியர், சகோதரி , ஆலயம் இங்கெல்லாம் செல்லும்போது வெறுங்கையுடன் செல்லக்கூடாது.

→ வானவில்லை பிறருக்கு காட்டக்கூடாது.
→ ஈரக்காலுடன் படுக்கக்கூடாது.
→ ஒரு காலால் இன்னொரு காலை தேய்த்து கழுவக்கூடாது.
→ பகைவன், அவனது நண்பர்கள், கள்வன், அடுத்தவன் மனைவி இவர்களுடன் உறவு கொள்ளகூடாது.
→ பெற்ற தாய் சாபம், செய்நன்றி கொல்லுதல், பிறன் மனைவி கூடுதல், மூன்றுமே பிராயச்சித்தமேயில்லாமல் அனுபவித்தே தீர வேண்டிய பாவங்கள்.

→ பகலில் உறங்குவது, உடலுறவு கொள்வது கூடாது.
→ ரிஷி, புரோகிதர், குரு, ஜோதிடர், குடும்ப வைத்தியர், மகான்கள், கெட்ட ஸ்த்ரியின் நடத்தை இவற்றை பற்றி வீண் ஆராய்ச்சியில் ஈடுபடவோ, அவர்களீடம் உள்ள தவறுகளை விளம்பரபடுத்தவோ கூடாது.

→ நம்மை ஒருவர் கேட்காதவரையில் நாம் அவருக்கு ஆலோசனை கூறக்கூடாது.